விழாவில் சென்னை சிவா இ.என்.டி., மருத்துவமனை எம்.டி., டாக்டர் குமரேசன் பேசியதாவது: பொதுவாக குரல் பாதிப்பு என்றால் அது சளித்தொல்லை தான் என்று நினைக்கின்றனர். அது தவறானது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கத்தி பேசினாலோ, உணர்ச்சி வசப்பட்டு பேசினாலோ தான் மாணவர்கள் பயப்படுகின்றனர் என்று நினைப்பதும் தவறு. கத்தி பேசுவதால் குரலுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.தமிழ் மருத்துவ புத்தகங்களில் குரல்வளத்தை பாதுகாக்க மூச்சுப்பயிற்சி தேவை என்று உள்ளது. ஆங்கில முறைப்படி நுரையீரலில் இருந்து தொண்டை, மூக்கு வரை நன்றாக மூச்சை இழுத்துவிட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதுதான் தமிழ் மருத்துவ புத்தங்களில் உள்ளங்கால் முதல் உச்சஞ்தலை வரை இழுத்து மூச்சு விடவேண்டும் என்றும், அது குரல்வளத்தை பாதுகாக்கும் என்று சொல்லியுள்ளது. இதுபோன்று உள்ளங்கால் முதல் உச்சஞ்தலை வரை மூச்சு விட முடியுமா என்று சந்தேகம் தோன்றும். தாரளமாக முடியும். அதற்கு மூச்சுவிடும் போது அடிவயிற்றை நன்றாக அசைத்துக் கொடுத்தால் போதும். அடிவயிற்றை அசைவு கொடுத்து மூச்சு விடுவதால் சுவாச பயிற்சி சிறப்பாக அமையும். குரல்வளமும் நன்றாக இருக்கும். புற்றுநோய் மற்ற இடங்களில் வந்தால் சீக்கிரம் தெரியாது.ஆனால் தொண்டையில் ஏற்படும் புற்றுநோய் உடனடியாக தெரிந்துவிடும்.
மேடைப்பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள் உள்ளிட்ட குரலை மூலதனமாக வைத்து இருப்பவர்கள் கழுத்தை இறுக்கி நிலையில் பேசக்கூடாது. இலகுவாக கழுத்தை வைத்துக் கொண்டு பேசவேண்டும். அந்தகாலத்தில் பாட்டு கற்றுக் கொள்பவர்கள் கழுத்துவரை தண்ணீரில் நின்று கற்றுக் கொள்வர். அதுவும் ஒருவகை குரல்வள பாதுகாப்பு முறைதான். இப்போது பாடல் கற்றுத்தருபவர்கள் ராகத்தை இழுத்து பாடுவதில் குரல்வள பாதுகாப்பு பயிற்சி இருந்தது. அதையெல்லாம் நாம் இப்போது செய்வது கிடையாது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் போது ராகத்தோடு சொல்லித்தந்தால் குரல் வளம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.